இக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை, கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்தே மாணவர்களின் இலக்கிய அறிவையும், ஆராய்ச்சி மனப்பான்மையும் ஊக்குவிக்கும் வகையில் முழுச்சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. 2011இல் இளங்கலைத்தமிழ்ப் பாடப்பிரிவோடு தொடங்கப்பட்ட இத்தமிழ்த்துறையில் 2015-2016 கல்வி ஆண்டு முதல் முதுகலைத் தமிழ்ப் பாடப்பிரிவும் தொடங்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
2020ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாறிய இக்கல்லூரியின் தமிழ்த்துறையில் பதின்மர் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இளங்கலைத்தமிழ்ப் பாடப்பிரிவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் முதுகலைத்தமிழ்ப் பாடப்பிரிவில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களும் தற்போது பயின்று வருகின்றனர். “தமிழ்த்துறையில் பாரதிதாசன் இலக்கிய மன்றம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பேச்சு. கவிதை. கட்டுரை. ஓவியம். நாடகம் மற்றும் நடிப்பு போன்ற நுண்கலைகள் இம்மன்றத்தின் சார்பில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இலக்கிய மன்ற விழா நடத்தப்படுகிறது. விழாவினை மாணவர்களே பொறுப்பேற்று நடத்தும் படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் நுண்கலை போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை பெற்று வருகின்றனர். இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தாய்மொழி தமிழ் வழியில் சிறப்பு வகுப்புகள் தமிழ்த்துறை பேராசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
“ஒழுக்கம், திறமை, உயர்வு ஆகியவற்றைக் கற்பித்து விழுமியம் மிக்க சமூக உறுப்பினர்களை உருவாக்குதல்” என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இத்துறை செயல்பட்டு வருகிறது.